இந்தியாவில் பெரும் துயரம்...
ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் AI 171 விமானம் 2 விமானிகள் மற்றும் 10 கேபின் குழுவினர் உட்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்டது..
அதில் பயணித்தவர் 162பேர் இந்தியர்கள் 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள்...7 பேர் போர்ச்சுக்கல் நாட்டவர்..1 ஒருவர் கனடாவை சேர்ந்தவர்...
விபத்தில் அனைவரும் மரணமடைந்து விட்டதாக தகவல்..
இந்த விமானம் மோகானி நகரில் உள்ள பி ஜே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது...
விடுதியில் தங்கி இருந்த 20 முதல் 50 வரையிலான மாணவர்கள் படுகாயம்... கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 60பயிற்சி மருத்துவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை...
தீயணைப்பு,விமானப்படை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் 53 இங்கிலாந்து பயணிகள் பயணித்த நிலையில் 020 7008 5000 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்தது இங்கிலாந்து அரசு! "மீட்புப் பணிகளில் உறுதுணையாக இருப்போம்" - இங்கிலாந்து அரசு!
தற்போது வரை 133 க்கு மேல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்..
இதே விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த ஆகாஷ் என்ற நபர் விமானத்தில் பல பிரச்சனை இருந்ததாக அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.AC வேலை செய்யவில்லை என்ற தகவலையும் கூறி உள்ளார்..
விபத்துக்குள்ளான விமானம் 2024ம் ஆண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானமாம்.... (பாலிமர் செய்தி)
என்ன தொழில்நுட்ப கோளாறு இருந்தது? எப்போது சரி செய்யப்பட்டது? பறக்க தகுதியான விமானம் என்பதற்கான சான்று வழங்கப்பட்டதா?
சான்று வழங்கிய நிபுணர் யார்?
அதிக எரிபொருள் நிரப்பியதால் விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை டாடா நிறுவனத்திற்கும் விமான போக்குவரத்து துறை மற்றும் அதன் அமைச்சருக்கும் உண்டு..
இறந்த பயணிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்





No comments:
Post a Comment